திருநெல்வேலி: மே 1ம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் இருந்து கோக், பெப்சி உள்ளிட்ட 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்து, நெல்லை கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவு:
தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்ககூடாது என மதுரை ஐகோர்ட் கடந்த 2016 நவம்பர் 21ல் உத்தரவிட்டது. அதன் பிறகு, 2017 மார்ச் முதல் வாரத்தில் ஐகோர்ட் மீண்டும் அந்த தடையை நீக்கி தண்ணீர் வழங்கலாம் என தெரிவித்தது.
மே 1 முதல் தடை:
இந்நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வரும் மே 1 முதல் பெப்சி, கோக், மதுரா கோட்ஸின் 2 ஆலைகள், 3 காகித ஆலைகள், சிமெண்ட் ஆலை உட்பட 8 ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் கருணாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment